Friday, April 27, 2012

சேமிப்பு vs முதலீடு

வணக்கம் நண்பர்களே,

நமது முந்தைய பதிவில் (கேள்வி - பதில்) குறிப்பிட்டு இருந்ததை போல நல்ல முதலீடுகளைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால், சேமிப்பிற்கும் முதலீட்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சேமிப்பு:







நண்பர் ஒருவர் தனது மனைவிக்கு மொபைல் வாங்கி கொள்ள சொல்லி ரூபாய் பத்தாயிரம் கொடுக்கிறார். நண்பரது மனைவி அவ்வளவு விலையில் வாங்க வேண்டுமா என்று யோசித்து ரூபாய் நான்காயிரம் விலையுள்ள மொபைல் வாங்கி கொள்கிறார்.

இதன் மூலம் நண்பரது மனைவி சேமித்தது ரூபாய் ஆறாயிரம்.

"நமது செலவை குறைப்பதின் மூலம் அல்லது (அனாவசிய) செலவு செய்யாமல் இருப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தினால் அதனை சேமிப்பு என கூறலாம்"

முதலீடு: 









சேமிப்பு என்பது முதலீட்டின் முதல் படி என எடுத்துக் கொள்ளலாம்.

சேமித்த பணத்தை முதலீடு செய்யாமல் இருந்ததால், அந்த பணமானது அதன் மதிப்பை இழந்து விடும். 

அதாவது பணவீக்கத்தை விட அதிக வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யாமல் இருந்திருந்தால் உங்கள் பணத்தின் மதிப்பு குறைவாகவே இருக்கும். 

(இந்தியாவின் பணவீக்கம் - மார்ச் மாதத்தின் படி - 6.89%)

"சேமித்த பணத்தை முறையாக நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்" 


சேமிப்பு என்பதும் முதலீடு என்பதும் ஒன்றல்ல.  ஆனால் முதலீடு என்பது சேமிப்பில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. 

பெரும்பான்மையான பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்கு சேமிப்பு பற்றி சொல்லி கொடுக்கின்றனர். ஆனால் முதலீடு பற்றி சொல்லி கொடுப்பது மிக குறைவாகவே உள்ளது. 


அடுத்து வரும் பதிவில் முதலீட்டு திட்ட வகைகள் பற்றி பார்ப்போம்.

Note: Kindly post your valuable comments. (உங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யவும்)

தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள்  இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம் 


Mail to: snp.personalfinance@gmail.com

- SNP 









1 comment:

  1. UPDATE: இந்தியாவின் பணவீக்கம் - ஏப்ரல், 2012 = 7.23%

    ReplyDelete